சென்னையில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நிலவும் காற்று மாசு குறித்து ஹாவர்ட் பல்கலைக்கழக குழு ஆய்வு மேற்கொண்டது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நகரங்களில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சுமார் 33 ஆயிரம் பேர் காற்று மாசால் உயிரிழந்துள்ளதும், டெல்லியில் ஆண்டுதோறும் 12 ஆயிரம் பேர் காற்று மாசால் உயிரிழந்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், சென்னை உள்பட 10 நகரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 11 புள்ளி 5 சதவிகித மரணங்கள் காற்று மாசால் ஏற்படுவதாகவும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.