பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டாமர்ருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரிட்டன் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த கெயிர் ஸ்டாமர்ருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தளத்திலும் இந்தியா- பிரிட்டன் இடையிலான விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவை வலுப்படுத்த தாம் ஆர்வமுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தங்களது பதவிக்காலத்தில் இந்தியா, பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்த முனைப்பு காட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.