திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா புகார் அளித்துள்ளார்.
நெருக்கடியில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா சென்று ஆய்வு நடத்தினார்.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 79-ன்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கும், டெல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோராவுக்கும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா புகார் மனு அனுப்பியுள்ளார்.