கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
முதலைக்குளம் தெருவில் உள்ள டீக்கடையில் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் கடை முழுவதும் தீ பரவியதையடுத்து தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.