நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் சூழலில், மேலும் 2 பேருந்துகளில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை கட்டுமான பணிக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை வெளியேற்றும் வரை பணியில் யாரும் ஈடுபட போவதில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.