திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது பயணி தனது கால்களுக்கு இடையில் தங்க கட்டியை பெல்ட்டால் கட்டி நூதன முறையில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர்.