தென்காசி அருகே பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் முருகேஸ்வரி. இவர், தனக்கு சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் வருவாய் ஆய்வாளர் குருவையா மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் முத்துக்குமார், ராஜா மற்றும் சண்முகப்பிரபு ஆகியோரை கைது செய்தனர்.