டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்தபோது, மாநில கலால் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்தார்.
எனவே, ஊழல் குற்றச்சாட்டில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் துணை முதல்வர் பதவியை சிசோடியா இழந்தார்.
இந்த வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், ஜூலை 15-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.