ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மசவுத் பெசஷ்கியான் அதிபராக பதவியேற்க உள்ளார்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டரில் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இதில் சீர்திருத்த கட்சி 1 கோடியே 63 லட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சயீத் ஜலில் தலைமையிலான புரட்சிகர இஸ்லாமிய முன்னணிக்கு ஒரு கோடியே 35 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.