திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அலந்தலை கடற்கரை அருகே கடலோர காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த லாரியில் சோதனை செய்தபோது இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியில் இருந்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.