திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் காய்கனி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத 3வது வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு காய்கனி அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
அந்தவகையில் விவசாய பொருட்களின் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும், மக்கள் குறையின்றி வாழ வேண்டியும் காஃலிபிளவர், வெண்டைக்காய், பீன்ஸ், எலுமிச்சை உள்ளிட்ட காய்கனிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெக்காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.