பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலியாயின.
சிவாஜி தெருவை சேர்ந்த ராமசாமி 10 ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல ஆடுகளை மேய்த்தபின் பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.
பின்னர் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.