தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மழைக்கால சீசனையொட்டி படகு சவாரி தொடங்கப்பட்டது.
சுற்றுலாத் தளமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் 70 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் அருவிக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக படகு சவாரி திகழ்ந்து வருகிறது.
தற்போது படகு குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவங்கி வைத்தார்.