திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மனைவியின் கழுத்து மற்றும் காது மடலை அறுத்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதூர் அண்ணாநகரைச் சேர்ந்த பொன்னப்பன் – புனிதா தம்பதி, கடந்த 1 வருடமாக கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே புனிதா நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பொன்னப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புனிதாவின் கழுத்து மற்றும் காது மடலை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து புனிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், தப்பியோடிய பொன்னப்பனை தேடி வருகின்றனர்.