முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில், கரூரிலுள்ள அவரது வீடு உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தமது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்கவேண்டும் எனக் கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்த புகார் தொடர்பாக, கரூரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.