ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணாதுரை வீதியை சேர்ந்த பர்கத் பாவா, ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் குடும்பத்துடன் வெளியே சென்ற பர்கத் பாவா, வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்றரை சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.