குமரி மாவட்டம் குழித்துறை புதிய பாலத்தின் மேலிருந்து மழைநீர் ஓடையில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மிதப்பங்கோடு பகுதியை சேர்ந்த அர்ஜூனன், குழித்துறை ஆற்றின் மேற்பகுதியில் இருந்து தவறுதலாக கீழே உள்ள மழைநீர் ஓடையில் விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்ததையடுத்து சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு முதியவரை பத்திரமாக மீட்டனர்.