புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தில் உள்ள பிரச்னைகள் படிப்படியாக சரிசெய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்றும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்றும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒருசில திருத்தங்களுடன் கடந்த 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது.
இதில் சில குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், புதிய சட்டம் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது என்றும், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களவையில் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், விதிமுறையையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.