ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையின்கீழ், இந்திய அணி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.