மும்பையில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அசாம், உத்தரகாண்ட், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியது.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து மீட்பு பணியில் மும்பை மாநகர ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.