ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் 26 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம் லூர் – சித்தூர் சாலையில் குடிபாலா பகுதியில், பொதுத்துறை வங்கி ஒன்றின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 26 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயைத் திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் ஏடிம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.