பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, ஜீன் லூக் மெலன்சொனின் இடதுசாரி கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்ட போதும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் அரசியல் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.