லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரும், அமெரிக்க வீரர் பென் ஷெல்டானும் மோதினர்.
இதில் ஜானிக் சின்னர் 6-2, 6-4, மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் பென் ஷெல்டானை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.