டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோவை அணி த்ரில் வெற்றி பெற்றது.
சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது.
161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி ஆட்ட இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.