இந்தியா தென் ஆப்பரிக்கா இடையேயான 2வது மகளிர் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் 2வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்கா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்க இருந்த போது தொடர் மழை பெய்தது இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.