மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மீன்பிடித்தடை காலம் முடிந்து மீன்பிடித்து வரும் நிலையில், உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்திப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.