தென்காசியில் அனுமதி இன்றி நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த 4 இளைஞர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக போலீசார் கைது செய்தனர்.