டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விரைவில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்தபோது, மாநில கலால் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்தார். எனவே, ஊழல் குற்றச்சாட்டில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால், சிசோடியா 16 மாதமாக சிறையில் வாடுவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் முறையிட்டார். இதைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கில் விரைவில் விசாரணை தொடங்கும் என தெரிவித்தனர்.