பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது, ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த ரத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக செல்வதற்காக, உடனடியாக மனித சங்கிலி மூலம் வழி ஏற்படுத்தி சுலபமாக கடந்து செல்ல வழிவகை செய்தனர்.
பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது, கூட்டத்தை கட்டுப்படுத்துதல், உணவு விநியோகம், மருத்துவ உதவி என பல்வேறு சேவைகளை, ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் பல ஆண்டுகளாக செய்து
வருகின்றனர்.