இந்தியா- ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின்பேரில், பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய கூட்டமைப்புக்கு அதிகாரபூர்வமாக பயணம் மேற்கொள்வதாகவும், அடுத்த 3 நாட்கள் கழித்து ஆஸ்திரியாவுக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது நண்பர் புதினுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.