கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் விருத்தாசலம் அடுத்த புதுஇளவரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் என்பவர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்டில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரது உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக என்எல்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் சக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.