மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாக பேசியதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழக அரசின் தகவல்படி, 38 மாவட்டங்களிலும் சராசரியாக சுமார் 3 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏழை மாவட்டமான விழுப்புரத்தில் அதிக பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டுமெம் எனவும் அவர் கூறினார்.
ஆனால் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்படுவது உதயநிதி ஸ்டாலினின் உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிவதாகவும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட, விக்கிரவாண்டி இடைத்தேர்தலே சரியான தருணம் என்றும் அன்புமணி ராமஸ்தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.