விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த வகையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில்அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனையொட்டி 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிறது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.