பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.