நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் பயணிகள் அச்சமடைந்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, முள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பலாப் பழங்கள் அதிகளவில் காய்த்துக் குலுங்குகின்றன.
இவற்றை உண்பதற்காக 3 காட்டு யானைகள் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றித் திரிந்தன. இந்நிலையில், அவ்வழியாக அரசுப் பேருந்தை வழிமறிந்து காட்டு யானைகள் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.