மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், தமிழக இந்து துறவிகள் பேரவை மற்றும் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.
அதில், நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது குறித்து அவதூறாக பேசிய வரும் மதுரை எம்பி சு.வெங்கடேசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், அவரது பதவியை ரத்து செய்ய வேண்டும் என சுடலையானந்தா சாமிகள் வலியுறுத்தியுள்ளார்.