தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை அனுமதி தரக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
குள்ளபுரம் கிராமத்தில் உள்ள கல்குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பகுதியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள், கனிம வளத்துறை சார்பில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.