ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இருவர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் மச்செடி பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மலை உச்சியில் இருந்தவாறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.