ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வேலைக்காக விண்ணப்பித்த பெரும்பாலான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு, அந்நாட்டு ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டு உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் 2 இந்தியர்கள் உயிரிழக்க நேர்ந்தது. இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.