அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியைத் திறந்ததாக பெங்களூரில் விராட் கோலி உணவகம் உள்பட நான்கு உணவகங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு எம்.ஜி. சாலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள உணவகங்கள் நள்ளிரவு ஒரு மணி வரை திறந்திருக்க பெங்களூரு மாநகராட்சி அனுமதியளித்திருந்தது. ஆனால், நள்ளிரவு ஒன்றரை மணி வரை இங்குள்ள உணவகங்கள் திறந்திருந்தது மட்டுமன்றி, பலத்த சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகாரின்பேரில், விராட் கோலி உணவகம் உள்பட நான்கு உணவகங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.