கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ரோஸ் கார்டனில் இருந்து சிவாஜி நகர் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. எம்.ஜி. சாலையின் அனில் கும்ப்ளே சிக்னலில் திடீரென நின்ற பேருந்தை ஓட்டுநர் இயக்க முயன்றார்.
அப்போது திடீரென பேருந்தின் எஞ்சினில் தீப்பிடித்தது. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை உடனடியாக கீழே இறங்க அறிவுறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.