கேரள மாநிலம் திருச்சூரில் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை பாம்பு உரசிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொடுங்கலூரில், கோயிலுக்கு அருகே உள்ள மரத்தடியில் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சாரைப் பாம்பு உறங்கிக் கொண்டிருந்த முதியவரை உரசி சென்றது.
பாம்பை கண்டதும் அருகே இருந்து அனைவரும் ஓட்டம் பிடித்த நிலையில், முதியவர் பதற்றமின்றி எழுந்து உட்கார்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.