விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
மடத்துப்பட்டி தெருவில் 80 வயதான நாச்சியார் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.