தென்கொரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் வயதான மக்கள்தொகை மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நெருக்கடியில் தவிக்கிறது.
இதனை சமாளிக்க மருத்துவக்கல்லூரிகளில் 2035ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் இடங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
ஆனால் இத்தனை அதிகமான மாணவர்களை கையாளக்கூடிய அளவுக்கு போதிய சுகாதார கட்டமைப்பு இல்லை எனக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்த தென்கொரிய அரசு அந்த முடிவை வாபஸ் பெற்றுள்ளது.