வெளிநாட்டில் பெண் ஒருவர் சான்ட்விச் சாப்பிட்டபோது அதை சீகல்ஸ் பறவைகள் பறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பெண் சான்ட்விச்சை திறந்து அதை சாப்பிட முயன்ற போது நேராக பறந்துவந்த சீகல்ஸ் பறவை ஒன்று, அதை வாயால் கொத்தி கீழே தள்ளியது.
இதனால் பதறிப்போன அந்தப் பெண் கத்திக் கூச்சலிட்டார். உடனடியாக அங்கு கூடிய சீகல்ஸ் பறவைகள், அந்த சான்ட்விச்சை கொத்தித் தின்ன தொடங்கின. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.