உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.
உத்தரகண்டில் பெய்த கனமழை காரணமாக குமான் மண்டலத்துக்கு உட்பட்ட தனக்பூர், பன்பாசா, காதிமா ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
பின்னர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை சந்தித்த அவர், மீட்பு பணியின்போது எதிர்கொண்ட இடர்பாடுகளை கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
இதனிடையே, கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக உத்தரகண்டில் பன்பாசா பகுதியில் சாரதா அணைக்கட்டில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.