2 நாள் பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அறியப்படாத ராணுவ வீரர்களின் நினைவாக மாஸ்கோவில் கட்டப்பட்ட நினைவிடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு அங்குள்ள பதிவேட்டில் தனது நினைவலையை பதிவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர் மாஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் அணு தொழில்நுட்பக் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அங்குள்ள ஒவ்வொரு பாகங்களின் சிறப்பம்சம் குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள், பிரதமர் மோடியிடம் விளக்கினர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் ஆகியோர் உடனிருந்தனர்.