ஜம்மு-காஷ்மீரில் கேட்பாரற்று கிடந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு செயலிழக்கச் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நாக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில், செல்ஃபி பாய்ண்ட் அருகே வெடிபொருள் ஒன்று கிடந்தது.
இதையறிந்த பாதுகாப்பு படையினர், வெடிபொருளை மீட்டு செயலிழக்கச் செய்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.