ஆம்பூரில் தனியார் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் இரும்பு ஷெட்டர் விழுந்து லாரி ஓட்டுனர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் ஹேம்நாத் என்பவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் பணியில் இருந்த ஹேம்நாத் மீது எதிர்பாராத விதமாக இரும்பு ஷெட்டர் விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.