நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள நாடு காணி சோதனை சாவடியில், தேவாலை போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கூடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிஜாம் என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, தடை செய்யப்பட்ட MDMA போதைப்பொருளை பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போதைப்பொருள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், நிஜாமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.